உலக அளவில் இலங்கை தொடர்பில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம்!
உலக ஒழுங்கு தற்போது குலைந்து கொண்டு இருக்கின்ற நிலையில் அதற்கு தலைமை தாங்கும் நாடாக அமெரிக்கா இருப்பதாக அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, உலக ஒழுங்கு தற்போது குலைந்துள்ளதுடன் புதிய ஒழுங்கு உருவாகவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தன் தலைமைத்துவத்தை இழக்கக் கூடாது என்பதில் அக்கறையாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த உலக ஒழுங்கு பற்றிய பிரச்சினையை மிகத் தெளிவான அரசியல் தத்துவத்தின் அடிப்படையில் பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
உலக அளவில் இலங்கை தொடர்பில் ஏற்படப்போகும் திடீர் மாற்றம் குறித்து விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி