கொழும்பில் இனி காணி வாங்க நினைத்தும் பார்க்க முடியாது!
இலங்கையில் நடுத்தர வர்க்கத்தில் வாழும் மக்கள் தமது வருமானத்தை வைத்து கொழும்பில் இனிவரும் காலங்களில் காணிகளை கொள்வனவு செய்ய முடியாது என சிரேஸ்ட ஊடகவியலாளர் கஜமுகன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, நாட்டில் வாழும் அரச உத்தியோகத்தர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் வழங்கப்படும் சம்பளத்தை வைத்து எந்தவொரு அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல வீட்டினை வாங்குவதோ, அல்லது உடைகளை வாங்குவதோ இனிவரும் நாட்களில் சாத்தியமாகாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்தோடு, ஏனைய நாடுகளை விட இலங்கையில் குறைந்த அளவில் வருமானம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,