உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா
நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(08.11.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மீண்டும் அதிகரித்துள்ளதுடன் ரூபாவி்ன பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டு வந்த நிலையில், நேற்றையதினம் திடீரென ரூபாவின் பெறுமதி உயர்ந்தது.
எனினும், இன்றையதினம் மீண்டும் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாணய மாற்று விகிதம்
இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (08.11.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 332.79 ரூபாவாகவும், கொள்வனவு விலை 322.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 243.43 ரூபாவாகவும், கொள்வனவு விலை 232.75 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி
இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 357.88 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 343.03 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 410.58 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 395.04 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri