100 ரூபாவால் குறைந்ததா டொலரின் பெறுமதி! கூகுளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
வழமைக்கு வந்தது கூகுள்..
கூகுள் தரவுகளில் இலங்கை ரூபாவுக்கு நிகரான ஏனைய வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் சடுதியான வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக இன்று மாலை பதிவு செய்யப்பட்டிருந்தது.
எனினும், தற்போது மீண்டும் கூகுள் தரவு வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் தற்போது ரூபாவின் பெறுமதி மீண்டும் பழைய தரவுகளின் படி காட்டுகின்றது.
முதலாம் இணைப்பு
அமெரிக்க டொலரின் பெறுமதி திடீரென 100 ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன்படி, டொலரின் பெறுமதி 236.81 ரூபாவாக காணப்படுகின்றது.
அது மாத்திரமின்றி யூரோ, பவுண்ட், கனேடியன் டொலர், சுவிஸ் பிராங்க் ஆகியவையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் படி கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் டொலரின் பெறுமதி சிறிது அதிகரித்தே காணப்படுகின்றது. மத்திய வங்கியின் தரவுப் படி டொலரின் இன்றைய பெறுமதி 336.01 ரூபாவாக காணப்படுகின்றது.
இதுவரையில் இலங்கை மத்திய வங்கியோ அல்லது ஏனைய வர்த்தக வங்கிகளோ வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் குறித்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.
எனினும், கூகுள் தரவில் பதிவிடப்பட்டுள்ள தொகை தொடர்பிலும் எவ்வித விளக்கங்களும் வெளியிடப்படவில்லை.
You may like this video