இலங்கையின் அரச வங்கிகளிற்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை! அம்பலமாகும் பின்னணிகள் (Video)
அரச நிறுவனங்கள் அனைத்தும் அரச வங்கிகளில் தான் தங்களுடைய கணக்குகளை வைத்திருக்கின்றார்கள். அரச வங்கி என்பது அரசாங்கத்தினுடைய வங்கி, அவர்களுடைய இலாபங்களை திறைசேறிக்கு கொடுக்கின்றார்கள். அந்த இலாபத்தினை அரசாங்கம் இழப்பதற்கு விரும்பாது என்று நான் நினைக்கின்றேன் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்க நிறுவனங்களுக்கு அரச வங்கிகள் பல்வேறுபட்ட சலுகைகளை வழங்குகின்றது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் பல வங்கி நடவடிக்கைகளுக்கு அவர்கள் பணம் அறவிடாமல் சேவைகளாக செய்வதும் உண்டு என்றும் அவர் கூறினார்.
அரச நிறுவனங்கள் அனைத்துமே அரச வங்கிகளில் நடைமுறை கணக்குகளை பேணுகிறார்கள். காசோலை கொடுப்பனவுகள் எல்லாம் அதன் மூலம் இடம்பெறுகின்றன.
நடைமுறை கணக்கிற்கு வட்டி வழங்கப்படுவதில்லை. அரச வங்கிகள் இதனை எல்லாம் இலாபமாக, கடனை கொடுத்து இலாபமாக பெற்றுக் கொள்வார்கள். இது அவர்களுக்கு இலாபமாக கருதப்படுகின்றது. இந்த நடைமுறை கணக்குகளெல்லாம் தனியார் வங்கிக்கு மாற்றப்பட்டால் அரச வங்கிகளில் வருமானம் வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் விளைவுகள் எதிர்காலத்தில் டொலர் மற்றும் ரூபாவின் பெறுமதியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் குறித்தும் பேராசிரியர் விபரித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,