புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: புத்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக புத்தளம் மாவட்ட அரச வங்கிகளின் ஊழியர்கள் மற்றும் அரச வைத்தியசாலைகளில் பணிபுரியும் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் அரச வங்கிகள் மூடிய நிலையில் காட்சியளிப்பதுடன் தூர இடங்களிலிருந்து வருகைத் தரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நியாயமற்ற வரிக்கொள்கை
இதேவேளை நியாயமற்ற வரிக்கொள்கை, மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநோயாளர் பிரிவு இயங்காமை இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது.

இதனால் வெளிநோயாளர் பிரிவு வெரிச்சோடிய நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வருகைத் தந்த நோயாளிகளும்
அசௌகரியங்களுக்குள்ளாகிய நிலையில் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக
இருந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.



ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam