புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: யாழ்ப்பாணத்தில் கவன ஈர்ப்பு போராட்டம் (video)
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை இன்றைய தினம் (01.03.2023) ஆரம்பித்துள்ளன.
இத் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று காலை 11 மணியளவில் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்று ஆதரவு வழங்கியுள்ளன.
இதேவேளை, தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடில்,
தொழிற்சங்க ரீதியாகக் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போராட்டக்காரர்கள்
தெரிவித்துள்ளனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
