40 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தம்
நாட்டின் சுமார் 40 தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இன்றைய தினம் காலை 8 மணி முதல் நாளை காலை 8 மணி வரையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
பிரதான அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கள் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அரசாங்கம் உரிய பதிலளிக்கத் தவறினால், எதிர்வரும் 8ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், வாழ்க்கைச் செலவினை குறைக்க வேண்டும் எனவும் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
40 தொழிற்சங்கங்கள்
துறைமுகம், ரயில்வே, பெட்ரோலியவளம், வங்கித்துறை உள்ளிடட 40 தொழிற்சங்களினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
நாடு முழுவதிலும் எதிர்ப்பு போராட்டங்கள், மெதுவாக வேலை செய்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சில முக்கிய துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
