புதிய வரிக்கொள்கைக்கு எதிர்ப்பு: மலையகத்தில் கறுப்புப் பட்டி அணிந்து போராட்டம்
தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மலையகத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆதவு தெரிவித்ததுடன் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை இன்றைய தினம் (01.03.2023) ஆரம்பித்துள்ளன.
இந்த நிலையில், இப்போராட்டத்திற்கு மலையகத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆதவு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தனது சம்பள உயர்வுக்காகவும் சம்பள முரண்பாட்டிற்காகவும் போராடும்போது ஒரு சில தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த போதிலும் ஆசிரியர் அதிபர்களில் பெரும் பாலானவர்கள் இந்த வரிக்கொள்கைக்கு உள்வாங்கப்படாத போதிலும் தாங்கள் ஒற்றுமை கருதி இதற்கு ஆதவு தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதே நேரம் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்திருந்த போதிலும் ஹட்டன், டிக்கோயா உள்ளிட்ட பல நகரங்களில் தபால் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன், தபால் விநியோக நடவடிக்கைகளும் வழமை போல் இடம்பெற்றுள்ளன.
இதேநேரம் ஹட்டன் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தனியார் மற்றும் அரச வங்கிகள்
மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
