கனடாவில் அறிமுகமான புதிய வரி திட்டம்: மருத்துவர்கள் பாதிப்பு
கனடாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மூலதன ஆதாய வரி திட்டத்தினால் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய அரசாங்கம் அண்மையில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்திலலே குறித்த மூலதன ஆதாய வரி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓய்வூதிய சேமிப்பு
இந்த புதிய வரி நடைமுறையினால் தங்களது ஓய்வூதிய சேமிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சில குடும்ப மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் குடும்ப மருத்துவர்களுக்கான ஓய்வூதியம், ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் காப்புறுதி கிடைக்கப் பெறுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வரித் திட்டமானது தங்களது சேமிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் குடும்ப மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |