பிள்ளையானின் கோட்டையை தகர்த்து சாதனை படைத்த வைத்தியர்
நாட்டில் ஏழு வருட இழுத்தடிப்பிற்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடைபெற்று அனைத்து முடிவுகளும் நேற்றைய தினம் வெளியாகி இருந்தன.
இதில் குறிப்பாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மையமாக வைத்து சிங்கள தேசிய கட்சிகளினுடைய பலவீனத்தை சாதமாக பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மிகப்பெரிய வெற்றியை கடந்த இரு தேர்தல்களிலும் பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த வெற்றியை அடியாகக் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் களமிறங்கிய போதும் அவர்களால் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
இது ஒருபுறம் இருக்க வடக்கு கிழக்கு தமிழர் தாயக பிரதேசத்திலே குறிப்பாக மட்டக்களப்பிலே சாணக்கியன் களமிறக்கிய வேட்பாளர்களில் 40 வீதமானவர்களே வெற்றி பெற்றுள்ளனர்.
ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசனுக்கும் வைத்தியர் ஸ்ரீநாத்திற்கு இவர்களோடு ஒப்பிடும் போது குறைவான இடமே ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் வைத்தியர் ஸ்ரீநாத் குறிப்பாக பிள்ளையானின் கோட்டை என அழைக்கப்படும் பகுதியை கைப்பற்றியுள்ளார்.
ஆகவே இவர்கள் அனைவரும் மக்கள் வழங்கியிருக்கின்ற ஆணையை இறுகப்பற்றி அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என மனித உரிமை செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
