சுகாதார அமைச்சினால் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு மீண்டும் அழைப்பு
விசாரணைகளை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சிடம் இருந்து மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல்களை, அதன் பதில் வைத்திய அத்தியட்சகராக இருந்த வைத்தியர் அர்ச்சுனா அம்பலப்படுத்தியமையை தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன.
இதனை தொடர்ந்து, மக்களின் ஆதரவும் அர்ச்சுனாவிற்கு அதிகரித்தன.
இதற்கிடையில், அர்ச்சுனா அரசியலில் களமிறங்குவதற்காகவே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக பல்வேறு கருத்துக்கள் எழுந்த போதும் அத்தகைய எண்ணம் இல்லை என அவர் மறுத்திருந்தார்.
இது தொடர்பில் வைத்தியர் அர்ச்சுனா விரிவாக பேசிய காணொளி கீழ்வருமாறு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam