புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்ற வேண்டாம்: பொதுமக்களிடம் வேண்டுகோள்
வைபவங்களில் புகைப்படங்கள் எடுக்கும் போது முகக்கவசங்களை அகற்றக் கூடாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
புகைப்படங்களை எடுக்கும் போது, முகக்கவசத்தை அப்புறப்படுத்துமாறு கோர வேண்டாம் எனவும் அவர் புகைப்பட பிடிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வைபவங்களில் புகைப்படங்கள் எடுக்கும் முகக்கவசத்தை அகற்றுவதை பலர் பழக்கமாக கொண்டுள்ளனர். இது சிறந்த செயல் அல்ல. தண்ணீர் அருந்துதல், சாப்பிடுதல் உட்பட அத்தியவசிய தேவைகளுக்காக அன்றி, வேறு காரணங்களுக்காக முகக்கவசங்களை அப்புறப்படுத்தக் கூடாது.
அத்துடன் தற்போது வைபவங்கள், விருந்துகள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது. இவற்றுக்கு நாம் விதித்துள்ள வரையறைகளை மீறாது செயற்பட்டால் சிறந்தது எனவும் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
