'டித்வா' பாதுகாப்பு மையங்களில் பாலியல் தொழிலாளர்களின் அவல நிலை
பேரிடரில் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு மையங்களில் தங்கியிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வாதிடும் ‘kek’ அமைப்பின் தலைவரான சகுனி மாயாதுன்னே, பல சர்ச்சைக்குரிய உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தான் ஒரு திருநங்கைப் பெண்ணாக இருந்தாலும், வெளிநாட்டுப் பயிற்சி பெற்று பாலியல் தொழிலாளர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கும் ‘tet’ என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முகாம்களில் நடக்கும் அநீதிகள்
முகாம்களில் இருக்கும் பாலியல் தொழிலாளர்களிடம் நிவாரண முகாம்களில் பணிபுரியும் சில அதிகாரிகள் பாலியல் இலஞ்சம் கோருவதாக எமது அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நிவாரண சேவைகள் அல்லது பிற சலுகைகளை வழங்குவதற்கான நிபந்தனையாக இவ்வாறான முறையற்ற கோரிக்கைகளை விடுக்கின்றனர்.அந்தக் கோரிக்கைகளை அவர்கள் நாசூக்காக தவிர்த்து வருகின்றனர்.

திடீர் பேரிடரில் பாதிக்கப்படும் இவர்களுக்கு நிவாரண முகாம்களை தவிர வேறு எவ்வித வழிகளிலும் உதவிகள் கிடைப்பதில்லை.இவ்வாறான பெண்கள் மீது இதுபோன்ற அழுத்தங்களை திணிப்பது அவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
துன்பத்திலும் உதவியற்ற நிலையிலும் இருக்கும் ஒரு குழுவை வேட்டையாட முயற்சிக்கும் திரிபுபடுத்தப்பட்ட மனநிலையால் தான் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.