வடக்கு - கிழக்கு பகுதிகளில் மாவட்டப் பொது வைத்தியசாலையில் புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு
கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனையில் மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான புதிய விடுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
185 மில்லியன் ரூபா செலவில் மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த விடுதி, மருத்துவ உத்தியோகத்தர்கள் தாங்கள் பணியாற்றும் மருத்துவமனைக்கு அருகிலேயே பாதுகாப்பானதும் வசதியானதுமான தங்குமிட வசதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமைக்கப்படவுள்ளது.
அதேவேளை, "சுகாதார சேவைக்குத் தேவையான கட்டடங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் அவசியமானவை. ஆனால், அவற்றை இயக்குகின்ற மனித வளமே சுகாதார சேவையின் உயிர்நாடியாகும்.
குறிப்பாக நோயாளிகளுடன் மிக நெருக்கமாகவும் தொடர்ச்சியாகவும் பணியாற்றும் தாதியர் உத்தியோகத்தர்களுக்குச் சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவது, தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது." என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.