யாழில் கோர விபத்து - ஆசிரியர் உட்பட இருவர் பலி
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கெற்பேலி பகுதியில் மகேந்திரா ரக வாகனமும் டிஸ்கவர் ரக மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய ஓய்வுபெற்ற ஆசிரியர் உயிரிழந்துள்ளார்.
இருவர் பலி
வரணி பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வேகன் ஆர் காரும், துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.