யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு - அரச அலுவலக காலதாமதங்களை குறைக்க அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள், கிராம அலுவலகங்கள், சமுர்த்தி அலுவலகங்கள், சமூக வலுவூட்டல் அலுவலகங்கள் மற்றும் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட அரச அலுவலகங்களில் ஏற்படும் காலதாமதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று (17.09.2026) முதல் பொதுமக்கள் தங்களது முறைப்பாடுகளை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு தொலைபேசி மூலம் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இந்த நடவடிக்கையின் மூலம் பொதுமக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் போது உத்தியோகத்தர்களால் ஏற்படுத்தப்படும் தேவையற்ற காலதாமதங்கள் மற்றும் தடைகள் தொடர்பில் அரசாங்க அதிபர் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் அலுவலர்கள் தொடர்பான தமது முறைப்பாடுகளை 076 22 33 000 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நாட்களில் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நேரடி அழைப்பின் ஊடாகப் பதிவு செய்யலாம்.
அத்துடன், WhatsApp அழைப்பு மூலமாகவும் தொடர்புகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலுவலர்கள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு விரைவாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கிலேயே இந்த தொடர்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO..