இலங்கையில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட திரிபுபட்ட கோவிட் வைரஸ் - தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு
தென்னாபிரிக்காவில் பரவும் B.1.351 எனப்படும் கோவிட் மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் முதல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி, நோய்த்தடுப்பியல் மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் இயக்குனர் வைத்தியர் ஜீவன்தர இன்று இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி டென்சானியாவில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்துள்ளார்.
இதேவேளை E484K என அழைக்கப்படும் மரபணுவினால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் மஹியங்கனை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும் பிரித்தானியாவில் பரவும் B.1.1.7 மரபணுவினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்கள் நால்வர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக ஐரோப்பாவில் பரவும் B.1 மரபணு தொற்றுக்குள்ளான 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பில் பரவும் B.1.1.103 மரபணுவினால் பாதிக்கப்பட்ட ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் மஹியங்கனை, அவிசாவளை, குருவிட்ட, பியகம, மாத்தளை, ரத்தோட்டை, களுத்துறை மற்றும் கொழும்பு நகர சபை எல்லையினுள் 93 பேரிடம் பெற்ற வைரஸ் மாதிரிகளின் மரபணு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
அதில் 81 பேர் இலங்கையில் பரவிய B.1.411 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டது. எப்படியிருப்பினும் அவர்களில் ஒருவர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் E484K என்ற மரபணுவினால் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளளது. இது மரபணு தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் மரபணுவை சேர்ந்ததாகும். இந்த மரபணு சிக்கலானதென குறிப்பிடப்படுகின்றது. இதற்கு தடுப்பூசியும் பயன்தராதென குறிப்பிடப்படுகின்றது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
