சஜித் ஏமாற்றியதால் பதவிகளை தூக்கி எரிந்த வடிவேல் சுரேஸ்
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் செயலில் அதிருப்தி அடைந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம்
பதுளை –மடுல்சீமையில் இன்று (09.02.2023) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.
முன்னதாக இவ்வாறு அறிவித்த சஜித் பிரேமதாஸ, சுகயீனம் காரணமாக அதில் பங்கேற்க முடியாது என பின்னர் அறியப்படுத்தி இருந்ததாக வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் வருகைக்காக காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சஜித்தின் ஏமாற்று வேலை
இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில், வெலிமடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார்.
எனவே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் இந்த செயற்பாடு தொடர்பில், அதிருப்தி ஏற்பட்டுள்ளமையால், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி பொதுச் செயலாளர் மற்றும் பசறை தொகுதியின் பிரதம அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து விலகுவதாக வடிவேல் சுரேஸ் மேலும் தெரிவித்துள்ளார்.