அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஆளும் கட்சி உறுப்பினர் அதிருப்தி
அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
முன்னாள் பிரதி சபாநாயகரான சந்திம வீரக்கொடி, ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதா இல்லையா என்பதனையே சிந்திக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு தற்பொழுது உடற்பயிற்சி பாதைகள் அத்தியாவசியமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உடற் பயிற்சி செய்யக்கூடிய நடைபாதைகள் அமைப்பதனை எதிர்க்கவில்லை என்ற போதிலும் தற்பொழுது மக்களின் பசியை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது, சீனி கொள்வனவு செய்ய மக்கள் சதொச நிறுவனங்களின் முன்னாள் நீண்ட வரிசையில் இருக்கின்றார்கள் இவ்வாறான நிலையில் எமது சில உறுப்பினர்கள் உடற் பயிற்சிக்கான நடைபாதைகள் பற்றி பேசினால் நாம் மட்டுமன்றி எமது பெற்றோரும் திட்டு வாங்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் கட்சி பேதங்களை களைந்து மக்களின் பட்டினியை தணிப்பது எவ்வாறு என்பதனையே சிந்திக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.