இந்திய பிரதமரை அவமரியாதை செய்த மாலைதீவு துணை அமைச்சர்கள் இடைநீக்கம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதை செய்யும் வகையில் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்ட மூன்று துணை அமைச்சர்களை மாலைதீவு அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது.
இதன்படி மரியம் ஷியூனா, மால்ஷா ஷரீஃப், அப்துல்லா மஜூம் மஜித் ஆகிய மூன்று அமைச்சர்களே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தரக்குறைவான கருத்து
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்ஸ இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் தரக்குறைவான கருத்துகளைப் பற்றி மாலைதீவு அரசாங்கம் அறிந்திருக்கிறது.
இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் தனிப்பட்டவை மற்றும் அரசாங்கத்தின் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்றும் மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆளும் அரசாங்கம் இந்த கருத்து தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இஸ்ரேலின் கைப்பாவை
குறித்த கருத்து அரசாங்கக் கொள்கையைப் பிரதிபலிக்காது என்று இந்தியாவுக்கு தெளிவான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நஹித் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கிடையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள மாலைத்தீவின் தகவல் மற்றும் கலைத்துறை துணை அமைச்சர் மரியம் ஹியூனா, பிரதமர் மோடியை "கோமாளி" மற்றும் "இஸ்ரேலின் கைப்பாவை" என்று குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், மாலைதீவுக்கு இந்திய இராணுவத்தின் இருப்பு தேவையில்லை என்று ஹியுனா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |