எரிபொருள் வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட சுகாதார தொழிற்சங்கங்கள் பணிபகிஸ்கரிப்பு (Video)
வவுனியா மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு கோரி வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் தொழிற்சங்களால் ஆர்பாட்ட பேரணியும், பணி பகிஸ்கரிப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலையில் இன்று ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி மன்னார் வீதி சந்தியை அடைந்து அங்கிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்று முடிவடைந்துள்ளது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்துக்கள் தெரிவிக்கையில்,
எமது ஊழியர்கள் உரிய நேரத்தில் எரிபொருள் கிடைக்காமையினால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.அத்தியாவசிய சேவையாக இருந்தும் எமக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்குவதற்கு இதுவரையில் தகுந்த முறைமை உருவாக்கப்படவில்லை.
சுகாதார சேவையில் ஸ்தம்பித நிலை
மேலும் சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து மட்டத்தினரும் வரிசைகளில் காத்திருப்பதால் வைத்தியசாலைகளின் சேவைகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக அரச அதிபருடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்தும் இதுவரை சாதகமான பதில் கிடைக்கப்பெறவில்லை.
வடக்கில் எமது மாவட்டத்தில் மாத்தி்ரமே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எமக்கான ஒரு தீர்வு கிடைக்காதவிடத்து தொடர் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுப்போம்" எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா மாவட்ட செயலக வளாகத்திற்குள் நின்று கோசங்களை எழுப்பியுள்ளனர்.
விசேட கலந்துரையாடல்
இதனையடுத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், அரசாங்க அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாண அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை |