யாழ்ப்பாண அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை
யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமை ஆற்றிய பிரதேச செயலக, மாவட்ட செயலக அரசாங்க உத்தியோகத்தர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய கடமைகளிலிருந்து வெளியேறி அலுவலக கடமைக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலிருந்து இன்று(28) காலையிலேயே பிரதேச செயளாலர்களுக்கு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
பணிப்புரை
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “எரிபொருள் நிரப்பு நிலைய கடமைகளிற்கு பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உறுப்பினர்கள் எரிபொருள் நிரப்ப நிலையத்தில் கடமையில் ஈடுபடுவார்கள்.
அத்துடன் ஏதாவது முறைப்பாடுகள் மற்றும் குறைபாடுகள் காணப்படும் நிலையில் அந்த இடத்திற்கு பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கடமை புரிவார்கள்” என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.