யாழில் நடைபெற்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய கலந்துரையாடல்
சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய பொது அமைப்புகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றுள்ளது.
இம்மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும் அதற்கான நூதனப் போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் இன்றையதினம்(19) நடத்தப்பட்டது.
குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது 8 மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நாட்வதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது.
விடுதலை விருட்சம்
எதிர்வரும் 24, 25 ஆகிய தினங்களில் உங்களது வீடுகளில் இருந்து கொண்டு வரப்படும் ஒரு சிறு துளி நீரையாவது சேகரித்து அவற்றை விடுதலை விருட்சம் நாட்டுவதற்கு பயன்படுத்த முடியும்.
இன விடுதலைக்காகவும் 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காகவும் குறித்த விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
