மட்டக்களப்பில் கைத்தொழில் முயற்சியாளர்களை அதிகரிப்பதற்கான கலந்துரையாடல்
மட்டக்களப்பில் கைத்தொழில் முயற்ச்சியாளர்களை வலுப்படுத்தி அதிகரிப்பதற்கான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (20) மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அரச, அரச சார்பற்ற பிரதிநிதிகளுடன் புதிய தொழில் முயற்ச்சியாளர்களை மாவட்டத்தில் உருவாக்குவதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கான அவசியம் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
அத்தோடு, உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர் பொருட்களை மாற்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்வதற்கு தேவையான வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதுடன் நவீன தொழில்நுட்பத்துடன் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் கிராமிய சிறு கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு துறைசார் ஆலோசனைகளையும், புதிய திட்டங்களையும் உடனடியாக ஆரம்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் உத்தியோகத்தர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
