பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது
அரச சொத்துக்களை நாசம் செய்தல் மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நெல்லியடி பகுதியில் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்து அதனை விற்பனை செய்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் பிரிவில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது.
முறைப்பாடு
கொடிகாமம் பொலிஸ், சாவகச்சேரி பொலிஸ், ஆகிய பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் என்றும் நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள்களை நெல்லியடி கரணவாய் பகுதியில் நீண்ட நாட்களாக அறுத்து அதனை விற்பனை செய்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், அந்த நிறுவனத்தினர் பத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகளை பொலிஸில் பதிவு செய்துள்ளனர்.
பிணை
இந்நிலையில், குறித்த நபரை தீவிரமாக தேடி வந்த நெல்லியடி பொலிஸார் வீடு ஒன்றில் பதுங்கியிருந்தவேளை சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரின் சகோதரி தென்மராட்சி பகுதியிலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பொலிஸ் உத்தியோகத்தராக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபரை நேற்று முன்தினம் (19) பருத்தித்துறை நீதி மன்றில் முற்படுத்தியவேளை அவரிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
