பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்கள் தொடர்பில் முறையிடலாம்!
யாழ்.மாவட்டத்தில் உள்ள வெதுப்பகங்கள் பாணின் விலையை 10 ரூபா குறைக்காமல் விற்பனை செய்யும் பட்சத்தில் அந்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை யாழ். மாவட்ட வெதுப்ப உரிமையாளர்கள் சங்கச் செயலாளர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் பாணின் விலையை பத்து ரூபா குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில் கொழும்பு வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கம் விலைகளை குறைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
பாணின் விலை
அநேகமான வெதுப்பகங்கள் பாணின் விலையை குறைத்துள்ள நிலையில் சிலர் குறைக்கவில்லை என்ற முறைப்பாடு தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே பாணின் விலையை குறைக்காத வெதுப்பகங்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடுகளை வழங்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் இன்றும் பிரிட்டிஷுக்கு கீழே இயங்கும் ஒரே ஒரு ரயில் நிலையம்.., எது தெரியுமா? News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
