தமிழ் முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்பும் கலந்துரையாடல்
வடக்கு, கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் நட்புறவை கட்டியெழுப்பும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று(1)யாழ். தந்தை செல்வா கலையரங்கத்தில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
வடக்கில் முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டு 35 வருட நிறைவை நினைவுகூரும் முகமாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடல்
குறித்த கலந்துரையாடலில் வடக்கில் இருந்து வெளியேற்ற முஸ்லிம்கள் மீண்டும் தமது பிரதேசங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டும்.

தமிழ் முஸ்லிம் மக்களிடம் நல்லதொரு உறவுப் பாலத்தை கட்டியெழுப்புவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்ற நிலையில் இரு தரப்பினரும் உறவை வளர்த்துக் கொள்ள இதய சுத்தியுடன் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam