கல்முனை மாநகர ஆணையாளருடன் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் விஷேட கலந்துரையாடல்
கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ. டி. எம் ராபி மற்றும் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் இடையிலான விஷேட கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (17) கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்கால திட்டங்கள்
கல்முனையின் நடப்பு சமூக பிரச்சனைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மாநகர சபையினால் பள்ளிவாசல் பரிபாலனத்துக்காக வழங்கப்படும் சேவைகள் தொடர்பாகவும், அவற்றின் தரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.
இந்தக் கலந்துரையாடல் ஊடாக சமூக நலனுக்காக இணைந்து பணியாற்றும் வகையிலும், எதிர்கால திட்டங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியையும் பிரதிபலிக்கும் வகையில் விஷேட கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




