ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீது தாக்குதல்
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உலுவடுகே சந்தமாலி மீதான தாக்குதல் குறித்து கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் நேற்று (16) இரவு கிராண்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது தான் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் குழுவினால் தாக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொழும்பு மாநகர சபையின் புதிய தவிசாளர் தேர்வு தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்வின்போதே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
தான் தாக்கப்படுவதைக் கேள்விப்பட்ட தனது கணவரும் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அவரும் இதன்போது தாக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
