அநுர தரப்பு வசமானது கொழும்பு மாநகர சபை
புதிய இணைப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வ்ராய் கலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் 61 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரிசா சாரூக்கினால் 54 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
இரகசிய வாக்கெடுப்பு மூலம் இந்த மேயர் தெரிவு நடைபெற்றது.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் ஹேமந்த குமார, கொழும்பு மாநகர சபையின் துணை மேயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு, எதிர்வினையின்றி தேர்வானார்.
இன்று(ஜூன் 16) நடைபெற்ற மாநகர சபையின் ஆரம்ப கூட்டத்தில் மேயர் பதவிக்கான வாக்குப்பதிவுடன் இணைந்து, துணை மேயர் பதவிக்கான அறிவிப்பும் இடம்பெற்றது.
முதலாம் இணைப்பு
கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலைத் தொடர்ந்து, புதியதாக தெரிவுசெய்யப்பட்ட கொழும்பு மாநகர சபை இன்று (ஜூன் 16) காலை நகர மண்டபத்தில் தனது தொடக்க கூட்டத்தைக் கூட்டியது.
முதல் அமர்வின் முதன்மையான நடவடிக்கையாக, மேயரும் துணை மேயரும் தெரிவுசெய்வது திட்டமிடப்பட்டிருந்தது.
இத்தேர்தலில் எந்தக் கட்சியும் தெளிவான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் கடந்த நாட்களில் தங்கள் வேட்பாளரை வெற்றியடையச் செய்ய வேறு குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறி வந்தன.
கூட்டத்தில் குழப்பமான நிலை
கூட்டத்தின் போது, NPP கட்சி சார்பில் வ்ராய் கலி பல்தசார் மேயராகவும், SJB சார்பில் ரிசா சாரூக் மேயராகவும் பெயரிடப்பட்டனர்.
மேயர் தெரிவு குறித்த வாக்கெடுப்பு முறை குறித்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில உறுப்பினர்கள் ரகசிய வாக்கெடுப்பை வலியுறுத்தினர், மற்றவர்கள் மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சரங்கிகா ஜயசுந்தரவை திறந்த வாக்கெடுப்பை நடத்துமாறு கேட்டனர்.
இதனால் கூட்டத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டது. மேயர் தேர்வுக்கான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மேயர் தெரிவிற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் மேயர் பதவிக்காக போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு எதிர்க்கட்சிகளால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிக்க சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்குழு முடிவு செய்துள்ளது.
அதன் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளருக்கு எதிராக வாக்களிக்க சர்வஜன அதிகாரம் கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் எதிர்க்கட்சிகளின் மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் ரிஸா சரூக் முன்மொழியப்பட்டுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சி அவருக்கே ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளது.
முன்னதாக தேசிய மக்கள் சக்தியின் வ்ராய் கெலி பல்தசாருக்கு சர்வஜன அதிகாரம் கட்சி ஆதரவளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - அஷ்ரப்







குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
