இலங்கையில் விமான விபத்துகளை ஆய்வு செய்ய விசேட சட்ட மூலம் : நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையில் இடம்பெறும் விமான விபத்துக்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு விசேட சட்டமூலமொன்றை உருவாக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் மற்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நிகழும் விமான விபத்துகள் மற்றும் தொடர்புடைய சம்பவங்களை விசாரிக்க தனித்து ஒரு சட்ட மூலம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
விபத்துகளை விசாரிக்கும் பொறுப்பு
2002 ஆம் ஆண்டு 34ம் இலக்க இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தின் கீழ், இத்தகைய விபத்துகளை விசாரிக்கும் பொறுப்பு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு (CAA) வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நாடளாவிய விமான விபத்துகளை விசாரிக்க விமான விபத்து விசாரணைப் பிரிவை(Aircraft Accident Investigation Bureau) அமைப்பதற்கான முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சட்ட வரைவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விமான விபத்துக்கள் குறித்து பக்கச் சார்பற்ற விசாரணை அமைப்பு இல்லாமையை சர்வதேச சிவில் விமான அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam