திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்பிலான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்
கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம், இன்று(26.06.2025) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி.எம் ஹேமந்த குமாரவின் நெறியாழ்கையின் இந்தக் கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இதன்போது, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப், ரொசான் அக்மீமன மற்றும் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்




