எரிசக்தி பிரச்சினை குறித்து சீன சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
நாடு எதிர்கொண்டுள்ள எரிசக்தி பிரச்சினை குறித்து சீனாவின் சூரிய சக்தி உற்பத்தி நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்
அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பாக பேசப்பட்டுள்ளது.
மீளுருவாக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவது குறித்தும் இவ்வேலைத் திட்டங்களை வலுவூட்டுவதற்கான வழிவகைகளையும் பெலிசிடி நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர், கலந்துரையாடியுள்ளார்.
சர்வதேச எரிசக்தி மாநாடு
இதனால், நாட்டிற்கு கிடைக்கவுள்ள நன்மைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டுள்ளதுடன், ஏற்பாடு செய்யப்படவுள்ள சர்வதேச எரிசக்தி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும் சீன நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில், அமைச்சரின் ஆலோசகர் ஹெட்டியாராச்சி, இலங்கை தேசிய கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய பணிப்பாளர் முர்ஷிதீன், ஏற்பாட்டாளர்கள், களுத்துறை நகர சபை உறுப்பினர் ஹிஷாம் சுஹைல், சியாஸ் சதுர்டீன் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
