இந்தியா - இலங்கை முதலீட்டு திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்
இந்தியா - இலங்கைக்கு இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு திட்டங்கள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் முதலீடுகள் தொடர்பாக இந்திய அரசாங்க குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (12.03.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் செயலாளர் சிறி பூபிந்தர் சிங் பல்லா தலைமையிலான குழுவினர், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குதாரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 3 நாள் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்திய உயர் அதிகாரிகள்
மேலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா உள்ளிட்ட இந்திய உயர் அதிகாரிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாராஜாவை விட அதிக விலைக்கு விற்பனை ஆன விஜய் சேதுபதியின் புதிய படம்.. மகிழ்ச்சியில் தயாரிப்பாளர் Cineulagam
