விசா நடைமுறைகள்! பிரதமரை சந்தித்த மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு நேற்று(21) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
விசா நடைமுறைகள்
இதன்போது இலங்கைக்கு வரும் மாலைதீவு பிரஜைகளுக்கான விசா நடைமுறைகளை முறைப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த, சுமூகமான பயண நடைமுறைகளை எளிதாக்குவதன் முக்கியத்துவம் தொடர்பில் இலங்கை பிரதமரும் மாலைதீவு அமைச்சரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் குறித்து பாராட்டிய மாலைத்தீவு அமைச்சர், திட்டங்களுக்கு ஏற்ப செயற்படும் திறன் குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாலைத்தீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இரு நாடுகளினதும் இராஜதந்திர நடவடிக்கைகளில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும் நீண்ட கால உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் குறித்து இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பரஸ்பர முக்கியத்துவம்
இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, இலங்கைக்கு வரும் மாலைதீவு பிரஜைகளுக்கான விசா நடைமுறைகளை முறைப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளினதும் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையின் முக்கிய பங்கு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்துவதில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டுள்ளனர்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
