சீன விமானம் விபத்துக்குள்ளாகிய பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
சீனா ஈஸ்டர்ன் ஜெட் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புக்குழுக்களால் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் அறிவிக்கவில்லை.எனினும் விமானத்திலிருந்த 132 பேரில் எவரும் உயிர் பிழைத்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய நேற்று கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டி உதவும் எனவும் நம்பப்படுகின்றது.
கண்டெடுக்கப்பட்ட கருப்புப் பெட்டியின் வெளிப்புறம் சேதமடைந்து நிலையில், அதன் உள் பதிவுகள் நன்றாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன் தரவுகளை ஆய்வு செய்வதற்காக இது பெய்ஜிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் கனமழையாகக் காணப்படுகின்றமையால் மீட்புப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான முயற்சி கடினமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.