இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு
இலங்கையில் பாதகமான வானிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் 21 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அனர்த்த முகாமைத்து மையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
குருநாகலில் 2 பேரும், கேகாலையில் 5 பேரும், களுத்துறையில் 3 பேரும், புத்தளத்தில் 2 பேரும், கொழும்பில் ஒருவரும், ரத்னபுரயில் 3 பேரும், காலியில் ஒருவரும் மற்றும் கம்பாஹாவில் நால்வரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, பத்து மாவட்டங்களில் 43,890 குடும்பங்களைச் சேர்ந்த 272,132 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக கம்பாஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவர எலிய, கேகாலை, கண்டி, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி ஐந்து பேர் காயமடைந்துள்ள அதேவேளை இரண்டு பேரைக் காணவில்லை எனவும் தெரியவருகிறது.
மேலும் அனர்த்த மைய அறிக்கையின்படி, 21 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதுடன் 1,095 வீடுகள் ஓரளவு சேதமடைந்துள்ளன.
அத்துடன் 694 குடும்பங்களைச் சேர்ந்த 2,689 பேர் 60 பாதுகாப்பான இடங்களுக்கு
அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
