அனர்த்த நிலைமை : புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அரசின் உதவி
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமையைக் கருத்திற்கொண்டு, புலம்பெயர்ந்துள்ள இலங்கைத் தொழிலாளர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஏனையவர்களுக்கு உதவுவதற்காக அவசர அனர்த்த பதிலளிப்புப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத்தின் பணிப்புரைக்கமைய இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் இந்த அலகு நிறுவப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு
அதன்படி, பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர புலம்பெயர் தொழிலாளர் சமூகத்திற்கு இதனூடாக உடனடி நிவாரணத்தை வழங்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அவசர உதவியை வழங்குவதில் உள்ள நடைமுறைச் சவால்கள் காரணமாக, பணியகத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு தொழிலாளர்களினது குடும்பத்துக்கும் தலா 15,000 ரூபா வரை நிதியுதவி வழங்க வேலைவாய்ப்பு பணியகம் நிதி ஒதுக்கியுள்ளது.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளின் ஒவ்வொரு பிள்ளைக்கும் அனர்த்த நிலைமையிலும் கல்வி தொடர்வதை உறுதிசெய்யும் வகையில் 10,000 ரூபா வரையான பொருள் உதவி வழங்கப்படவுள்ளது.
இந்த உதவியின் ஒரு பகுதியாக, அத்தியாவசிய மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக, புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்களுக்கு 7,000 ரூபா வரை நிதியுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் குடும்ப விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன், 1989 என்ற துரித எண் மூலமாகவோ அல்லது +94 719802822 என்ற வட்ஸ்அப் எண் மூலமாகவோ பகிர்ந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
தொடர் தோல்வி, ஆனாலும் முயற்சியை கைவிடாத ஷங்கர்.. ரூ. 1000 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம் Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam