மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளரை கொழும்பு குற்றப்புலனாய்வில் முன்னிலையாகுமாறு உத்தரவு
வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நேற்று (12) அவரது அலுவலகத்தில் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 09 ஆம் திகதி முல்லைத்தீவில் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர்வரும் 15ஆம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணை
மன்னார் - கோந்தை பிட்டியில் அமைந்துள்ள குற்ற விசாரணை அலுவலகத்தில் இருந்து வருகை தந்த பொலிஸார் குறித்த அழைப்புக்கடிதத்ததை கையளித்துள்ளனர்.
நேற்று (12) காலை மன்னாரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவரது மனைவியிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் 15ஆம் திகதி தன்னால் விசாரணைக்கு சமுகளிக்க முடியாத நிலை உள்ளதாகவும், அதற்கான திகதியை மாற்றி வழங்குமாறும் குறித்த நபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு அமைவாக எதிர்வரும் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்று வாக்கு மூலத்தை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு வழங்கப்படும் விலை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
