திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர்! சந்தேகநபர் குறித்து வெளியான தகவல்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 77 வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு முக்கிய சான்றுகளை மையப்படுத்தி மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கடந்த 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதேவேளை, சம்பவ தினத்தன்று இரவு தினேஷ் ஷாப்டர் இங்கிலாந்து செல்லவிருந்த நிலையில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணை அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் தொடர்பான விசாரணை
வெளிநாடு செல்வதற்காக தினேஷ் ஷாப்டர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா அல்லது அவரின் வெளிநாட்டுப் பயணத்தை குற்றவாளிகள் அறிந்திருக்கலாம் என விசாரணையில் சந்தேகிக்கின்றனர்.
எனினும் தொழில் அனுபவமுள்ள ஷாப்டர் போன்றோர் ஒருவரைச் சந்திப்பதற்காக பொரளை மயானத்தை தெரிவு செய்திருப்பது விசாரணை அதிகாரிகளின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.
எனினும், அவ்வாறான வர்த்தகரொருவர் பொரளை மயானத்திற்கு யாரையாவது சந்திப்பதற்காக சென்றால், சாரதியோ அல்லது நெருங்கிய ஒருவரையோ பாதுகாப்பிற்காக யாரையும் அழைத்துச்செல்லாமை தொடர்பிலும் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எவ்வாறாயினும், ஷாப்டரை சந்திப்பதற்காக பொரளை மயானத்தில் ஒருவர் இருந்ததாகவும், அந்த நபர் ஷாப்டரின் கொலையாளியாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.எவ்வாறாயினும், ஷாப்டரின் கொலை திட்டமிட்ட கொலை என்று புலனாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஷாப்டரின் மனைவி டானி ஷாப்டரிடம் பல தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் மற்றும் கொலை செய்யப்பட்ட ஷாப்டரை மயானத்தில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஷாப்டரின் நண்பரான கிரிஷ் பெரேராவிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலம் குறித்தும் பல தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
