பிரபல தமிழ் வர்த்தகரின் கொலையை மறைக்க மறைகரமொன்று இலஞ்சம் வழங்குகிறதா..!
பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பாக பொலிஸாருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ நிராகரித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பிரபல வர்த்தகரின் மரணம் தொடர்பான உண்மைகளை மறைக்குமாறு மறைகரமொன்று பொலிஸாருக்கும் விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இலஞ்சம் வழங்குகின்றது என தெரிவிக்கப்படுவதை பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ நிராகரித்துள்ளார்.
உண்மையை மறைப்பதற்கு எவராவது முயன்றால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,