கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிலும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் (Photo)
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியிலும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (26.09.2022) கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி செய்தி - எரிமலை
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகரில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.