முல்லைத்தீவில் பல்வேறு இடங்களில் தியாகதீபம் திலீபன் நினைவு நாள்!
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு நாள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நினைவிற்கொள்ளப்படவுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் அமைக்கப்பட்ட பந்தலில் (26.09.22) நாளை காலை 9.00 மணிக்கு திலீபனின் நினைவு படத்திறகு சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தவுள்ளது.
வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்படல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படும் நினைவவேந்தல் நிகழ்வு இம் முறையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வணிக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு நாளை காலை திலீபனுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடாகியுள்ளதாக புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.
35ம் ஆண்டு நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 35ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உடையார்கட்டு மண்ணில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 9:00மணிக்கு ஆரம்பமாகும் பொதுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதால் தாயக மக்கள் அனைவரையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இதுவும் குணசேகரன் சதி தான்.. புது முடிவெடுத்த ஜனனி! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam