தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!: யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்தி பவனி (Photos)
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஊர்தி பவனியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்திலிருந்து இன்று காலை 11மணியளவில் குறித்த ஊர்திபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பலரும் அஞ்சலி
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.
மேலும், தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 'திலீபன் வழியில் வருகிறோம்' என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி பவனியானது நேற்றைய தினம் வடமராட்சிப் பகுதிகளில் பயணித்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தின் பொத்துவிலில் ஆரம்பித்த ஊர்தி பவனி, தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கியவாறு பருத்தித்துறை நகருக்குள் நேற்று காலை பயணித்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பருத்தித்துறையில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் தூபியடியில் அஞ்சலி செலுத்தப்பட்டது,
இந்த ஊர்திப் பவனியானது யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் நாளை 26 ஆம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
