மன்னாரில் தடைகளைத் தாண்டி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஸ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம்(26) மன்னாரில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் சுடரினை ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும், மன்னாரில் நினைவேந்தல் நிகழ்வினை தடுக்கும் நோக்கில் குறிப்பிட்ட இடங்களில் பொலிஸார் மற்றும் இராணுவம் காலை முதல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை சிவகரன் மேற்கொள்ள இருப்பதாகக் கூறி மன்னார் பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் தடை உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 5 மணி நேரம் முன்

கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்.. கடை திறப்பு விழாவில் அதிர்ச்சி! வைரல் வீடியோ Cineulagam

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
