டீசலின் விலை எதிர்வரும் நாட்களில் 50 ரூபா வரை அதிகரிக்கும்! மரிக்கார் எம்.பி. எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் ஒரு லீட்டர் டீசலின் விலை அண்ணளவாக 150 ரூபா வரை உயரக்கூடும் என்றும், இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு மேலும் அதிகரிக்கும் என்றும் எஸ்.எம்.மரிக்கார் எம்.பி. எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் விலை
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
குறைந்த மின்சாரக் கட்டணம், குறைக்கப்பட்ட வரிகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நிவாரணங்களை பொதுமக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக வாக்குறுதியளித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

இருப்பினும், செலவுகளைக் குறைப்பதற்குப் பதிலாக, தற்போதைய ஆட்சியின் கீழ் மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குடிநீர்க் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகளிலும் மேலும் உயர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.
ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் காரணமாக, வரும் வாரங்களில் இறக்குமதி பொருட்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய உள்ளீடுகளின் விலைகள் அதிகரிக்கும் . ரூபாயின் மதிப்பு சரிந்ததால் நாட்டின் கடன் சுமை கடுமையாக அதிகரித்துள்ளது.
டொலர் மதிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்றதிலிருந்து டொலர் மதிப்பு 292 ரூபாவிலிருந்து 336-ரூபாவையும் தாண்டி உயர்ந்துள்ளது.
நிலக்கரி இறக்குமதி மற்றும் தனியார் மின்சாரக் கொள்முதலில் அதிகரித்த செலவினங்கள் காரணமாக பாரிய இழப்புகள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டி, எரிசக்தித் துறையை அரசாங்கம் எதேச்சதிகாரமாக கையாள முற்படுகின்றது.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவை பெரிதும் சார்ந்துள்ளது மேலும் பொருளாதார அழுத்தம் இறுதியில் பொதுமக்களின் தலையில் சுமத்தப்படும்.பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டு மற்றும் வரிகள் மூலம் பொதுமக்கள் மீது மேலதிக சுமைகள் சுமத்தப்படும் என்றும் மரிக்கார் எம்.பி. எச்சரித்துள்ளார்.
குடும்பத்தினரைப் பார்க்காமல் நான்கு ஆண்டுகள்... வெளிநாட்டில் கோர விபத்தில் சிக்கிய ஆசிய இளைஞர் News Lankasri