கடும் கோபத்தில் மஹிந்தவின் செயல் - காணொளியில் சிக்கிய காட்சிகள் (VIDEO)
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கையை அமைச்சர் ஒருவர், பிடிக்கும் போது அதனை கோபத்துடன் தட்டிவிடும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
எனினும் இதன்போது மஹிந்தவின் பெறுமதியான கைக்கடிகாரம் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியானது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேரணியின் மேடையில், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கையைப் பிடித்து தூக்க முற்பட்ட போது கோபத்துடன் மஹிந்த ராஜபக்ஷ அவரது கையை தட்டி விட்டார்.
இந்நிலையில் இந்த காணொளி வெளியான பின்னர் மஹிந்தவின் பெறுமதியான கைக்கடிகாரம் காணாமல் போனதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. எப்படியிருப்பினும் அந்த செய்தி முற்றிலும் போலியானதென மஹிந்தவுக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.