வடகிழக்கு பிள்ளைகளின் கல்விநிலைமை குறித்து சபையில் கோரிக்கை
தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.03.2025) இடம்பெற்ற, 2025ஆம் ஆண்டிற்கான வரவுசெவவுத்திட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அதேவேளை வன்னியில் பெருமளவான பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதியின்மை, அதிகளவான அதிபர், ஆசிரியர், பணியாளர்களின் ஆளணி வெற்றிடங்கள் காணப்படுதல் உள்ளிட்ட விடயங்களையும், தகவல் தொழில்நுட்ப கல்வியில் ஏனைய மாகாகாணங்களை விட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுவதையும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
வரவு - செலவுத்திட்டம்
அத்துடன், கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் சிறந்து விளங்குதல் என்ற நோக்கிலே அரசின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் கல்விக்கான ஒதுக்கீடுகள் அமையப்பெற்றிருக்கின்றன.
தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமே கல்வி என்ற வகையில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடுகள் இம்முறை இப்பாதீட்டிலே உள்ளடக்கப்பட்டமையை இந்த நேரத்தில் வரவேற்றுக்கொண்டு கல்விக்கான ஒதுக்கீடு தீவளாவிய வகையில் சமத்துவ அடிப்படையில் பகிரப்படுவதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள் என்றே வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக நானும் கேட்டுக்கொள்கிறேன்.
அத்துடன், பாடசாலை உட்கட்டுமான மேம்பாட்டுக்காக 10000 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறோம். போதுமானதற்ற கட்டடங்கள், கட்டிமுடிக்கப்படாத வகுப்பறைக் கட்டடங்கள், நூலகங்கள், ஆய்வுகூடங்கள் இன்றி வன்னிப்பிராந்தியப்பாடசாலைகள் இன்னமும் இருப்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.
வன்னியில் வாழும் எங்கள் பிள்ளைகள், போதுமான ஆசிரியர்கள் இன்றி, இணைய வசதி இன்றி, முறையான வழிகாட்டல்கள் இன்றி பாடசாலை மட்டத்திலே மிகவும் இடர்படுகின்றார்கள்.
இடைவிலகல்கள்
பாடசாலைகளில் நிலவும் இடைவிலகல்கள் இன்றளவும் வன்னிப்பிராந்தியத்தில் அபாயநிலையிலேயே காணப்படுவதை இப்பேரவையிலே முன்வைக்கிறேன்.
வன்னிமாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் எதிர்கொள்ளும் சவால்களில் முதன்மையானவை ஊழியர் பற்றாக்குறை. வன்னி மாவட்டத்தில் உள்ள 6 கல்வி வலயங்களில் குறிப்பாக முல்லைத்தீவு கல்வி வலயத்தில் கணிதம், விஞ்ஞானம் ஆங்கிலம், அழகியல் பாடங்கள், விசேட கல்வி, உயர்தர பௌதிகவியல், இணைந்த கணிதம், வணிகக்கல்விபாடங்களுக்கு ஆசிரியர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது.
1AB பாடசாலை தொடக்கம் வகை 2 பாடசாலை வரை உரிய பாட ஆசிரியர்கள் இன்மையால் நீங்கள் முன்மொழியும் தரமான கல்வியை எங்கள் மாணவர்கள் பெற இயலாதுள்ளனர். தரமான கல்வியைக்கொள்கையை எங்கள் வன்னியிலும் உறுதிப்படுத்துவீர்களா? மிகவும் கடைசி நிலையில் STEM கல்வியில் உள்ள எங்கள் மாவட்டத்தின் முல்லைத்தீவின் ஆசிரிய ஆளணித் தேவைக்குக்கு உங்கள் வரவுசெலவுத்திட்டம் முன்னிரிமை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
