அமெரிக்காவுடன் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால்..ஜெலன்ஸ்கியின் நிபந்தனை
போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்கள் தரப்பு விருப்பங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று உக்ரைன்(Ukraine) ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவில் உக்ரைன் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே ரஸ்யாவுடனான போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தை
கடந்த முறை சவுதி அரேபியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அழைக்கப்படாமைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.
குறித்த சந்திப்பு வாக்குவாதத்தில் முடிந்த நிலையில் பேச்சுவார்த்தை முடிவதற்குள் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் காணொளி வெளியானது.
அதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவிகளை நிறுத்துவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சவுதி மன்னர் முகமது பின் சல்மானை நேற்று சந்தித்துள்ள நிலையில், இன்று(11) ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சவுதி அரேபியாவிற்கு வருகை
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ நேற்றையதினம் சவுதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஸ்யா இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஜெட்டா நகரில் நடைபெறுகின்றது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது, அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை இறுதி செய்வது மற்றும் முதற்கட்டமாக போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க மத்திய கிழக்கு செயலாளர் ஸ்டீவ் விட்கோஃப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, "போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்.
ஆனால், எங்கள் தரப்பு விருப்பங்கள் சரியான முறையில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அமைதியை கொண்டுவரும் விவகாரத்திலும், ஆதரவை தொடர்வதிலும் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது தெரியுமா.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் Cineulagam

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர், கொஞ்ச நாள் தான் இருப்பேன்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை Cineulagam

டாக்டராக இருந்து ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்து தற்போது செய்யும் வேலை? News Lankasri
